பெரம்பலூர் அருகே டூ

வீலர்கள் மோதல்; சிகிச்சையில் வாலிபர் சாவு!

schedule
2022-11-21 | 14:22h
update
2022-11-21 | 14:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two-wheelers collide near Perambalur; The teenager died in treatment!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஏற்பட்ட 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பலியானார்.

Advertisement

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தை சேர்ந்த தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜ்குமார் (27), நேற்று காலை சுமார் 11.15 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சென்று விட்டு, சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக், தெரணி பால்பண்ணை அருகே சென்ற போது எதிரே தெரணியில் இருந்து வந்த வையாபுரி என்பவரது பைக், ராஜ்குமார் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் காயமடைந்த வாலிபரை மீட்டு, சிறுவாச்சூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இன்று காலை சுமார் 8.25 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 08:46:44
Privacy-Data & cookie usage: