உதயநிதியின்  45-வது பிறந்த நாள்: ஆ.இராசா எம்.பி. தலைமையில் திமுகவினர் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்!

schedule
2022-11-27 | 18:42h
update
2022-11-27 | 18:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Udayanidhi’s 45th Birthday: A.Raja MP DMK members cut the cake and provided welfare assistance!

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படடிருந்த நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா. எம்.பி., கலந்து கொண்டு, கட்சியினர்‌ மற்றும் பொதுமக்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும், பெரம்பலூர் நகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் 200 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான, சேலை, தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை ஆ.இராசா.எம்.பி. வழங்கினார்.

Advertisement

மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், எ.ரசூல்அகமது, தங்க. கமல், டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பழக்கடை ஒஜீர், யூனியன் சேர்மன்கள் பிரபாசெல்லப்பிள்ளை, மீனா அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 07:07:41
Privacy-Data & cookie usage: