உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-08-26 | 01:22h
update
2026-06-12 | 08:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ulamas and staff can join the welfare board: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆசிர்கனாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இவ்வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு (10ஆம் வகுப்பு முதல் முதுகலை தொழிற்கல்வி வரை கல்வி பயில்பவர்களுக்கு) கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்தினால் மரணம் ஏற்பட்டதற்கான உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி நலத்திட்ட உதவிகளின் மூலம் பயன்பெற உலாமாக்கள் மற்றும் பணியாளர;கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், உறுப்பினராக பதிவு செய்வதற்கு பின்வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தினை இருப்பிடமாக கொண்டு 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், அடக்கஸ்தளங்கள், தைக்காக்கள், ஆசிர்கனாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும். வேறு எந்த நலவாரியத்திலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைவரும்; உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:17:14
Privacy-Data & cookie usage: