சொந்த நிலத்தில் சுண்டல் விற்க முடியவில்லை: பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை, மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

schedule
2022-06-09 | 14:26h
update
2022-06-09 | 14:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unable to sell toast on own land: No action to petition to Perambalur Collector, depressed woman attempted suicide!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) மற்றும் அவரது மனைவி லதா இருவரும் தழுதாழையில் டாஸ்மாக் கடை அருகே தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெட்டி கடை வைத்து சுண்டல், தட்டைப்பயிறு விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்த திமுகவை சேர்ந்த சிலர் பெட்டிக்கடை வைத்து நடத்தக்கூடாது என அவரது கடையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் மீது நடவடிக்கை இல்லாதால் அ இதனால் மனமுடைந்த இளையராஜா அவரது மனைவி லதா மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த பிறகு இளையராஜாவிடம் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளையராஜாவின் மனைவி லதா அரளி விதையை (விஷ விதை) அரைத்து நேற்றிரவு குடித்துள்ளார். இதில் மயக்கமடைந்து கிடந்த அவரை உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 20:54:39
Privacy-Data & cookie usage: