பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு : இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி !

schedule
2022-04-21 | 08:43h
update
2022-04-21 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unannounced power outage in Perambalur district: Public suffering due to inability to sleep peacefully at night!

பெரம்பலூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில், கடந்த சில நாட்களாகவே முன்னறிவிப்பு இல்லாத அறிவிக்கப்படாத மின்வெட்டு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த மின் வெட்டால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவின் முற்பகுதியில் 7 – 11 வரையில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

நள்ளிரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் தூக்கம் தொலைப்பதுடன் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை என தெரிவிக்கும் பொதுமக்கள், பகல் நேரத்தில் மின்வாரியம் குறிப்பிட்ட நேரத்தை மின்சாரத்தை துண்டிப்பதற்காக எடுத்துக் கொண்டு அறிவிக்க வேண்டும், இரவு நேரத்தில் முழுவதுமாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த முறை திமுக ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஒன்று. அதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மின்மிகை மாநிலமாக தமிழகத்தை அறிவித்தார். தற்போது ஆட்சியாளர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

தமிழக அரசு தடையற்ற மின்சாரம் கிராமங்களுக்கும் வழங்க, அத்அமைச்சர் செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:48:35
Privacy-Data & cookie usage: