மின் மிகை மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு : கொசுக்களால் கிராம மக்கள் அவதி

schedule
2017-10-26 | 08:29h
update
2026-07-04 | 02:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Uncategorized power outlet in the state of the electrode state: Perambalur Disrict villagers are suffering from mosquitoes

பெரம்பலூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில், கடந்த ஓரிரு வாரமாகவே மாலை மற்றும் முன் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இந்த மின் வெட்டால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு 8 – 9 மணி அளவில் அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

மின்வெட்டு காரணமாக கொசுக்கள் ரீங்காரமிட்டு வட்டமடித்து தூங்க விடாமல் செய்கிறது. மேலும், கொசுக்கள் கடிப்பதால் டெங்கு அல்லது மர்ம காய்ச்சல் ஏற்பட்டு விடுமோ என அச்சமடைகின்றனர். ஓரிரு நாட்களில் நள்ளிரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் தூக்கம் தொலைப்பதுடன் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை என தெரிவிக்கும் பொதுமக்கள், பகல் நேரத்தில் மின்வாரியம் குறிப்பிட்ட நேரத்தை மின்சாரத்தை துண்டிப்பதற்காக எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் முழுவதுமாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஒன்று. அதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மின்மிகை மாநிலமாக தமிழகத்தை அறிவித்தா. தற்போது ஆட்சியாளர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

மின்மிகை மாநிலம் என அறிவித்து கொள்ளும் தமிழக அரசு தடையற்ற மின்சாரம் கிராமங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 02:26:13
Privacy-Data & cookie usage: