வேலையின்மை, வருமானம் இழப்பால், பெரம்பலூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2018-12-03 | 06:35h
update
2018-12-03 | 06:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unemployment and loss of income, Perambalur youth throwing suicide: Police investigate

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த பார்த்தீபன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32), ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாயார் இறந்ததையொட்டி கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவியும் அவரது அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.

Advertisement

பாலசுப்பிரமணியனுக்கு, தொழிலில் தொடர்ந்து வருமானம் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், நலிந்து வந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தூங்கிய அவர் காலை 8 மணியாகியும் எழுந்து வராததால் சந்தேகப்பட்ட உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 09:41:23
Privacy-Data & cookie usage: