பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!

schedule
2020-02-19 | 05:01h
update
2020-02-19 | 05:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unidentified men tried to cross the road near the colliding vehicle kills near Perambalur!

பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட துரைமங்கலம் ஏரிக்கரை பகுதியில் நெடுவாசல் பிரிவு சாலை அருகே, மோட்டார் சைக்கிளில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இரு வாலிபர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாகவும், உடல்கள் சிதறிக்கிடப்பாதாக வந்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள முத்துக்கண்ணு மகன் இளவரசன் (வயது 23), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள அமங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித் (வயது 24 ) என்பதும், இருவரும். நெல்அறுவடை இயந்திரங்களின் ஓட்டுனர்கள் என்பதும் தெரிய வந்தது. பலியான இரு இளைஞர்களின் உடல்களையும், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 02:02:29
Privacy-Data & cookie usage: