பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாலிபர் அடித்து கொலை! மர்ம நபர்கள் வெறிச்செயல்!!

schedule
2019-04-04 | 06:23h
update
2019-04-04 | 06:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unidentified youth killed in Perambalur The mystery of the mysterious people !!

அடையாளம் தெரியாத நபரை ஹலோபிளாக் கற்காளால் அடித்து கொன்று முகத்தை சிதைத்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

 

பெரம்பலூர் நகரில் ஆத்தூர் செல்லும் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுபான கடை எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும், ஒரு கட்டிடத்தின் முன் பகுதியில் ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட்டும், வெள்ளை நிறத்தில் பூ போட்ட சட்டையும் அனிந்திருந்துள்ள அடையாளம் தெரியாத சுமார் 27 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் ஹலோபிளாக் கற்களால் தலையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 05:57:54
Privacy-Data & cookie usage: