மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை : பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தா தகவல்

schedule
2020-01-12 | 00:53h
update
2026-07-11 | 18:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unique Identity Card for Disabled Persons: Perambalur Collector V. Santha Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்புபணிகள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொடர்புடைய பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

Advertisement

சிறப்பு முகாமின் போது மாற்றுத் திறனாளி நபர்கள் அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று எடுத்து வரவேண்டும்.

வரும் ஜன.20 அன்று அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் குரும்பலூர் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஜன.21 அன்று லப்;பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகம், ஜன.22 அன்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கவேண்டும்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி நபர்களுக்கு அந்தபகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து செயலாளரிடம் 21.01.2020 முதல் 29.01.2020க்குள் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அந்தபகுதி ஊராட்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி நபர்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 18:26:14
Privacy-Data & cookie usage: