பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்கள், உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் நடவடிக்கை ! பெரம்பலூர் ஆட்சியர்

schedule
2019-04-03 | 18:16h
update
2019-04-03 | 18:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unregistered children’s homes, and to action without a license Hostels ! Perambalur Collector


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:


இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை தங்க வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே குழந்தைகள் இல்லங்களாக கருதப்படும். இந்நிறுவனங்கள் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் விதிகளின்படி, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அனைத்து தனியார் நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகள், விடுதிகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும்.

Advertisement

குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுவது தொடா;பாக நடைமுறையிலுள்ள சட்டங்கள், அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் பேணப்படுவது அனைத்து நிறுவனங்களாலும் உறுதி செய்யப்படல் வேண்டும்.

மேற்கண்டவாறு உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அனைத்து வகை தனியார் நிறுவனங்களின் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் உரிமம் பெறாத அனைத்து வகை தனியார் நிறுவனங்களின் விடுதிகளை நடத்தும் நிh;வாகிகளுக்கு உhpய சட்டத்தின்படி சிறைதண்டணை மற்றும் அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு குழந்தைகளை தங்க வைத்திருக்கும் குழந்தைகள் இல்லங்களை, இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்திட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை அணுகியும், விடுதிகளை, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உரிமம் பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை அணுகியும் தொடர்புடைய நிறுவனங்கள் 18.04.2019 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

மேற்கூறியவாறு பதிவு அல்லது உரிமம் பெறாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.07.2026 - 14:33:37
Privacy-Data & cookie usage: