மே.17 வரை பெரம்பலூர் அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு மீண்டும் ரூ.2 லட்சம் வழங்கினார் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ!

schedule
2020-05-04 | 16:05h
update
2020-05-04 | 16:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Until May 17 at the Costless -food for public in Amma Unavagam : MLA R.T. Ramachandiran gave back Rs 2 lakh!

பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

Advertisement

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு மே-17 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை எளிய மக்கள் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ள ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே ரூ 2 லட்சம் வழங்கப்பட்டது .இந்நிலையில் ஊரடங்கு காலம் மே 17 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தனது சொந்த நிதி ரூ 2 லட்சத்திற்கான காசோலையை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனிடம் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில், பெரம்பலூர் நகர கழக செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 17:19:23
Privacy-Data & cookie usage: