நாமக்கல்லில் நகர திமுக செயற்குழு கூட்டம்

schedule
2018-12-04 | 11:23h
update
2018-12-04 | 11:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Urban DMK executive meeting in Namakkal

நாமக்கல்லில் திமுக நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான காந்திசெல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

Advertisement

கூட்டத்தில் நகர திமுக வளர்ச்சி குறித்தும், கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி பணிகளை நிறைவு செய்வது, நகரத்திற்குட்பட்ட வார்டுகளில் 100 கொடிகம்பம் அமைத்து கட்சி கொடியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ராணி, மற்றும் நக்கீரன்,பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, பூபதி, பால்ரவி,மணி, அன்பரசன், ஆனந்தன்,ஆனந்த், ரமேஷ் அண்ணாதுரை, அன்பரசு, மனோகரன், சரோஜா, நகர பூத் கமிட்டி ஆய்வாளர்கள் சத்தியபாபு, பாபு, சுகுமார், பாலமுருகன், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 05:00:50
Privacy-Data & cookie usage: