ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பணி பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் காலி பணியிடங்கள்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2020-12-15 | 07:25h
update
2020-12-15 | 07:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacancies in Rural Development and Panchayat Unit, Surveyor, Junior Drawing Officer: Perambalur Collector Information


பெரம்பலூர் கலெக்டர் ப.ஸ்ரீவெங்கடபிரியாசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள 16 (பதினாறு) பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை (ரூ.35,400 – 1,12,400 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்) நிரப்பிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் போன்ற விவரங்கள் இம்மாவட்டத்தின் www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் (வளர்ச்சி) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08.01.2021 (வெள்ளிக் கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 23:34:26
Privacy-Data & cookie usage: