நீதிமன்றத்தில் காலிப் பணியிடங்கள்: பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்!

schedule
2021-12-02 | 11:39h
update
2021-12-02 | 11:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacancies in the Court: Perambalur Chief District Judge Information!

பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடுநீதித்துறைஅமைச்சுப் பணியில் காலியாகஉள்ள 7 சுருக்கெழுத்து-தட்டச்சர் நிலை- 3 மற்றும் 4 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் பொருட்டு நேர்முகத் தேர்வு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறஉள்ளது.

அதன்படி சுருக்கெழுத்து-தட்டச்சர் நிலை-3 மற்றும் தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் 18 வயதுமுதல் 35 வயதிற்குள்ளும்,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுபிரிவினர் 18 வயதுமுதல் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்தில் (தமிழ் (அ) ஆங்கிலம்) ஏதேனும் ஒரு இளநிலைமற்றும் ஏதேனும் ஒருமுதுநிலையும் தட்டச்சில் (தமிழ் (அ) ஆங்கிலம்) இரண்டுமே முதுநிலையும் பெற்றிருக்கவேண்டும்.

Advertisement

மேலும் விவரங்கள் https://districts.ecourts.gov.in/perambalur என்ற இந்நீதிமன்ற இணையதள முகவரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பணிசெய்யும் விபரங்களுடனும்,அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிறசான்றிதழ்கள்) ஒருபாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டி (உரிய சுய சான்றொப்பத்துடனும்) மற்றும் பிறசான்றிதழ்களிலும் சுயசான்றொப்பம் இட்டும் முதன்மைமாவட்டநீதிபதி, பெரம்பலூர் என்ற முகவரிக்கு வரும் 20.12.2021 -ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபாலில்அனுப்ப வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ,நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.

மேலும், விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பும் https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்துகொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணைக்காமல், சான்றுகளின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். எனவே மேறகண்ட பணியிடங்களுக்கு 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:36:10
Privacy-Data & cookie usage: