அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் காலிப் பணியிடங்கள் : பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2021-07-20 | 16:42h
update
2021-07-20 | 16:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacancies on temporary basis in Government General Hospital: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக அரசாணையின்படி பகிர்ந்தளிக்கப்பட்ட மருந்தாளுநர்கள் 7 பணியிடங்கள், ஆய்வக நுட்புநர்கள் நிலை-2இல் 7 பணியிடங்கள் மற்றும் நுண்கதிராளர்கள் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய மேற்சொன்ன பதவிகளுக்கு தகுதியுடைய நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயப் படிப்பு மற்றும் பதிவு பெற்றதற்கான சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றுகளுடன் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், துறையூர் சாலை, பெரம்பலூர் – 621 212 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களுடைய விண்ணப்பங்களை 26.07.2021 பிற்பகல் 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைத்திடவேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு 29.07.2021 மேற்கண்ட என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறும். இந்தப் பணியிடங்கள் பணிவரன் முறை செய்யப்படவோ, நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 14:45:39
Privacy-Data & cookie usage: