பெரம்பலூர் கிளைச் சிறையில் காலிப் பணியிடம்: திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் தகவல்!

schedule
2023-01-27 | 16:40h
update
2023-01-27 | 16:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacancy in Perambalur Branch Jail: Trichy Central Jail Superintendent Information!

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின்கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள ஒரு தூய்மை பணியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இபப்ணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எழுதப் படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

Advertisement

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள் 34 வயதுக்குள்ளும், பிற வகுப்பினர் 32 வயதுக்குக்குள்ளும் இருக்க வேண்டும். தேர்தெடுக்கப்படும் தூய்மை பணியாளர் ஊதிய விகிதம் Level – 1 (15700 – 50000) – Rs. 15700/- ஆகும்.

மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் தங்கள் சுய விவரங்களை 10.02.2023-க்குள் சிறை கண்காணிப்பாளர், திருச்சி மத்திய சிறை, திருச்சிராப்பள்ளி-20 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பிட வேண்டும் என திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:41:04
Privacy-Data & cookie usage: