சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலி பணியிடங்கள்

schedule
2017-03-16 | 06:36h
update
2026-06-25 | 14:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacant posts in the Department of Social Security under the operating company

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் சமையலர், காவலர், தோட்டப் பணியாளர், காவலர், சுத்திகரிப்பாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் இரணுவத்தினர் மற்றும் பிற்பட்ட முஸ்லீம் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் நிலை.57, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, நாள்: 20.07.2016-ன்படி தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் (ஒரு காலிப்பணியிடம்-ஆண் மட்டும்), சமையலர் (ஒரு காலிப்பணியிடம்-இருபாலர்), காவலர் (ஒரு காலிப்பணியிடம்-ஆண் மட்டும்), தோட்டப்பணியாளர் (ஒரு காலிப்பணியிடம்-இருபாலர்), காவலர், சுத்திகரிப்பாளா; (ஒரு காலிப்பணியிடம்-ஆண் மட்டும்) ஆகிய காலிப்பணியிடங்களை முன்னாள் இரணுவத்தினர் மற்றும் பிற்பட்ட முஸ்லீம் வகுப்பினைச் சார்ந்த முன்னுரிமை பெற்ற சமூகப் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்றஃபயின்று வரும் மாணவஃமாணவியரைக்கொண்டு நிரப்பப்பட உள்ளது.

Advertisement

தகுதியானவர்கள் அதற்கான படிவத்தினை http://www.perambalur.tn.nic.in, என்ற பெரம்பலூர் மாவட்ட இணையதளம் அல்லது www.socialdefence.tn.gov.in இணையதளத்தில் பதிவறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர சான்றின் ஒளிநகலுடன் 25.03.2017-க்குள் “இயக்குநா; அலுவலகம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், அபிராமி தியேட்டர் அருகில், சென்னை 600010” என்ற முகவரிக்கு சேரும் வகையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் மேற்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது 044-26426421, 26427022 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 14:36:31
Privacy-Data & cookie usage: