பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்களுக்கான தடுப்பூசிப்பணி பணிகள்

schedule
2019-02-07 | 16:47h
update
2019-02-07 | 16:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vaccination work for poultry diseases in Perambalur district

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு 09.02.2019 முதல் 22.02.2019 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது.

இந்தமுகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 15:23:47
Privacy-Data & cookie usage: