நாமக்கல்லில் பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

schedule
2018-12-25 | 12:54h
update
2018-12-25 | 12:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vajpayee’s birthday party on behalf of BJP in Namakkal

Advertisement

நாமக்கல்லில் பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் நகர பாஜ கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசியோகம், மாவட்ட துணைத்தலைவர் விஜயலட்சுமி, நகர பொதுசெயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 12:53:22
Privacy-Data & cookie usage: