பெரம்பலூர் அருகே வேன்

மோட்டார் சைக்கிள் மோதல் ; விவசாயி பலி!

schedule
2017-08-31 | 02:20h
update
2026-07-03 | 13:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Van-motorcycle clash near Perambalur; The farmer kills

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுச்சேரியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது56) விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் வண்ணாரம்பூண்டி சென்றுவிட்டு பின்பு மேட்டுச்சேரி நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

Advertisement

கல்லாற்று பாலத்தின்மீது வந்த போது வி.களத்தூரிலிருந்து வண்ணாரம்பூண்டி நோக்கி சென்ற வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சேலம் மாவட்டம் வெள்ளையூரை சேர்ந்த மணி(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 13:15:48
Privacy-Data & cookie usage: