ஆன்லைன் சான்றுகளை பரிந்துரையை புறக்கணித்து பெரம்பலூரில் வி.ஏ.ஓக்கள் ஆர்ப்பாட்டம்

schedule
2017-12-20 | 16:05h
update
2017-12-20 | 16:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VAOs demonstrated at Perambalur ignoring the recommendation of online certifications

பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆன்லைன் சான்றுகள் மற்றும் பட்டா மாறுதல் பரிந்துரையை புறக்கணித்து விஏஓவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisement

ஆன்லைன் சான்றுகள் மற்றும் பட்டாமாறுதல் பரிந்துரை செய்வதற்கான செலவின தொகையை வழங்காததை கண்டித்தும் ஆன் லைன் மூலம் சான்றிதழ் வழங்குவதை நீக்கிவிட்டு பழைய காகித முறையில் பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,

கடந்த 14ஆம்தேதி முதல் ஆன்லைன் சான்றுகள் மற்றும் பட்டா மாறுதல் பரிந்துரையை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்காத சிஆர்ஏ-வை கண்டித்தும் விஏஓவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அருண்பிரசாத் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் 4 பெண் விஏஓவினர் உட்பட 17 விஏஓவினர்கள் கலந்துகொண்டனர். இந்த புறக்கணிப்பு போராட்டத்தால் பொது மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 18:10:43
Privacy-Data & cookie usage: