பெரம்பலூர் அருகே நிழற்குடை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வி.சி.க நிர்வாகி சம்பவ இடத்திலேயே பலி

schedule
2020-01-01 | 17:12h
update
2020-01-01 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VCK Branch Secretary killed in accident in Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பொறப்பான் (எ) கண்ணன்(வயது 45) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளர். இவர் இன்று மாலை மேட்டுச்சேரியில் இருந்து வேப்பந்தட்டைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது நெய்க்குப்பை புதூர் பகுதியிலுள்ள இருந்த நிழற்குடை மீது அவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.07.2026 - 19:05:41
Privacy-Data & cookie usage: