தொல்.திருமாவளன் பிறந்த நாளை முன்னிட்டு 1000 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் .

schedule
2016-08-20 | 05:03h
update
2026-06-27 | 20:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VCK leader Thol. Thirumavalan birth anniversary parties provided 1000 students scoring writring, Geomatric tool and notebooks


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது கோல், குறிப்பேடு, வடிவியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

நிகழ்ச்சியில் திருமாந்துறை ஒன்றியக் குழு உறுப்பினர் இளையராஜா சுமார் ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது கோல், குறிப்பேடு, வடிவியல் உபகரணங்கள் வழங்கினார்

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் பாலாஜி, மாநில செயலாளர் வீரசெங்கோலன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில், ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் தாஸ். வேப்பூர் ஒன்றிய துணை செயலாளர் கதிரவன், திருமாந்துறை முன்னாள் ஊராட்சி துணை செயலாளர் செல்லமுத்து, பொறியாளர்கள் முரளி, கார்த்தி, கிருத்துவ பேராய மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேஷ் ராவ் , மற்றும் தலைமை ஆசிரியர் ராணி, உதவி தலைமை ஆசிரியர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருமாந்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, பி.இ.எல்.சி. மற்றும் டி. கீரனூர் டி.இ.எல்.சி ஆகிய 3 பள்ளிகளில் பயிலும் 1000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது கோல், குறிப்பேடு, வடிவியல் உபகரணங்கள் வழங்கபட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 20:37:42
Privacy-Data & cookie usage: