குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 48 வாகனகங்கள் ரூ.88,336.75 -க்கு ஏலம்

schedule
2016-12-27 | 18:27h
update
2026-06-19 | 08:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vehicle seized in criminal cases 48 : Rs .88,336.75 Auctions
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 48 வாகனகங்கள் ரூ.88,336.75 -க்கு ஏலம் விடப்பட்டது

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் 26.12.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் 102 சி.ஆர்பி.சி. வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டு முறைப்படி அறிவிப்பு செய்து 26.12.2016ஆம் தேதி திங்கள் கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பெரம்பலூர் கோட்டாட்சியர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. அதில் மேற்கண்ட 48 வாகனங்கள் மொத்தம் ரூ.88,336.75-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகையானது சம்மந்தப்பட்ட அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 08:59:26
Privacy-Data & cookie usage: