பெரம்பலூர் அருகே வீட்டில் துணிகர திருட்டு: கூச்சலிட்டவரின் கையை, கத்தியால் கிழித்த கொள்ளையர்கள்!

schedule
2022-03-09 | 07:25h
update
2026-06-14 | 17:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Venture burglary at home near Perambalur: Robbers rip the hand of the screamer with a knife!

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் சீனீவாசன் மகன் ராஜா (50). அந்த ஊரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் குடியிருந்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல், ராஜா, அவரது மனைவி சுமதி (44), மகன் அக்சய் வாசன் (18) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

Advertisement

நள்ளிரவில் வீட்டினுள் பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு, விழித்த அக்சய் வாசன் திருடன், திருடன் என கூச்சலிட்டு வீட்டில் உள்ளவர்களையும், அக்கம்பக்கத்தாரையும் எழுப்பினார். அதற்குள் சுதாகரித்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரொக்கம் ரூ. 2லட்சத்து 17 ஆயிரத்து எடுத்துக் கொண்டு, இளைஞர் அக்சய் வாசனின் இடது கை மணிக்கட்டில் கத்தியால் கிழித்து விட்டு, மாடிப்படி வழியாக எகிறி குதித்து தப்பி தலைமறைவாகினர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருடனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாலிபர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:03:29
Privacy-Data & cookie usage: