பெரம்பலூரில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பில் திருட்டு!

schedule
2022-09-21 | 17:21h
update
2022-09-21 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Venture in Perambalur: Break the lock of the house and collect Rs. Theft worth 2 lakhs!

பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (60), தனியார் மருத்துவமனையில் மயக்குனராக உள்ளார். இவரது குடும்பத்தினர்கள், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் வசித்து வருகின்றனர்.

Advertisement

கடந்த செப்.16 அன்று, தனது குடும்பத்தினரை பார்க்க குடியாத்தம் சென்று விட்டு மீண்டும் இன்று மதியம் பெரம்பலூருக்கு திரும்ப வந்துள்ளார். அப்போது, வீட்டில் சென்ற போது, முன்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 2 கிராம் மோதிரம், 1 கிராம் தங்க காசு, வெள்ளி அரைஞான் கயிறு, வெள்ளி கொலுசுகள் திருடுபோய் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, கொள்ளையர்கள் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 22:52:34
Privacy-Data & cookie usage: