பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம்; பெண் ஆசிரியர்கள் வீட்டில் 20 பவுன் நகை, ரூ. 45 ஆயிரம் ரொக்கம் திருட்டு,

schedule
2019-01-22 | 17:37h
update
2019-01-22 | 17:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Venture into the broad daylight in Perambalur; teachers house 20 pounds jewelry, Rs. 45 thousand cash theft,

பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் வேலைக்கு சென்ற பெண் ஆசிரியர்கள் வீட்டில் 20 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.45 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட துறைமங்களம், நியூகாலனியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆரோக்கியராஜ் மனைவி அமுதா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதுடன், வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் தகர பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை, 45 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கியராஜ்-அமுதா தம்பதியினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், பெரம்பலூர் போலீசார், தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் சம்பவம் நடத்த பகுதியில் இருந்து சற்று தொலையில் உள்ள தெருவில் வசிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியையான சாந்தாமணி (வயது 45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் 3 பவுன் தங்க நகை யையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து அரங்கேறி வரும் இந்த தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி வாழ் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 10:42:59
Privacy-Data & cookie usage: