நகர வணிகர் நல சங்க கூட்டம்; வேப்பந்தட்டையில் நடந்தது!  

schedule
2022-03-27 | 13:31h
update
2022-03-27 | 13:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Veppanthattai City Merchant Welfare Association Meeting!

பெரம்பலூர் அருகே உள்ளள வேப்பந்தட்டையில் நகர வணிகர் நல சங்க கூட்டம் தலைவர் ஞானவேல் தலைமையில் நடைபெற்றது. கவுரவத் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

Advertisement

கூட்டத்தில், வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டிற்கான கால்கோள் விழாவிலும், தொடர்ந்து மே 5-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது, வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே வணிகர் நல சங்க பெயர் பலகையை விரைவில் திறந்து வைப்பது, வேப்பந்தட்டையில் தராசு பயன்படுத்தும் அனைத்து வணிகர்களின் தராசு களையும் ஒரே சமயத்தில் அதற்குரிய அதிகாரிகளை வரவழைத்து முத்திரையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் மெடிக்கல் குமார் வரவேற்றார். பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 11:02:41
Privacy-Data & cookie usage: