Veppur Government Arts and Science Women’s College 8th Annual Festival; Minister Sivasankar attended!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின 8-வது ஆண்டு விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை 1989-ம்ஆண்டு தி.மு.க.ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார்.

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் என்பது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 25 சதவிகிதம் பேர் மட்டுமே சேர்ந்து வந்த கல்லூரி படிப்புகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கல்லூரி படிப்பை 50 சதவிகிதம் மாணவ,மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இந்திய அளவில் தமிழகம் கல்லூரி படிப்பில் மிகுந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

இப்படி மகளிர்களுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கட்பிரியா, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், கல்லூரி முதல்வர் மீனா, வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் அ.கருணாநிதி, வேப்பூர் ஊராட்சித் தலைவர் தனம்பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களோடு அமர்ந்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்த்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!