பெண்களுக்கான இலவச பயணம் திட்டமான வெற்றிப்பயணம் பெரம்பலூரில் தொடக்கம்!

schedule
2026-10-02 | 14:38h
update
2026-10-02 | 14:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

‘Vetripayanam’ (Journey to Success) the free travel scheme for women—launched in Perambalur!

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மகளிர் கட்டணமில்லா பயணத்தின் நீட்டிப்பாக வெற்றிப் பயணம் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை கலெக்டர் ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் எம்.எல்.ஏ கி.சிவக்குமார் ஆகியோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 கிளைகளின் மூலம் இயக்கப்படும் மொத்தம் 108 பேருந்துகளில், 86 பேருந்துகள் (80 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.10.2026 - 15:15:58
Privacy-Data & cookie usage: