சாலையோர பள்ளத்தில் விழுந்த தொழிற்சங்க துணைத் தலைவர் பலி

schedule
2017-05-10 | 19:58h
update
2026-06-27 | 00:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நேசன் மகன் பகுத்தறிவு (32) இவர். திருமாந்துறை சுங்கச்சாவடியில் (திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை) கட்டண வசூல் செய்பவராக பணி புரிந்து வருகிறார்.

மேலும் தொழிற்சங்க துணைத் தலைவராகவும் உள்ளார் பகுத்தறிவு தற்போது சுங்கச்சாவடி அருகே உள்ள எறையூர் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

Advertisement

இவர் நேற்று காலை தனது குடும்பத்தாரிடம், குன்னம் அருகே உள்ள மருதையான் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 4 மணியளவில் பகுத்தறிவு தனது இரு சக்கர வாகனத்தில் பெரம்பலூரை நோக்கி பேரளி கிராமத்தின் அருகே அதி வேகமாக வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கிடந்த கற்கள் மீது விழுந்து தலை இரண்டாக பிளந்து சம்பவ இடத்திலே துடிதுடித்து பகுத்தறிவு இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகுத்தறிவு உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பகுத்தறிவுக்கு மீனா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:52:32
Privacy-Data & cookie usage: