பெரம்பலூரில் ரோந்து பணியின் போது ஏட்டுவை வக்கீல் தாக்க முயன்ற வீடியோ வைரலால் பரபரப்பு

schedule
2020-03-12 | 16:22h
update
2020-03-12 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Video of a lawyer trying to attack a Policeman during a patrol in Perambalur

Model

பெரம்பலூரில் இரவு ரோந்து பணிக்கு சென்ற போலீஸ் ஏட்டு ஒருவரை வக்கீல் ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்க முற்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் நியூ காலனி பள்ளிவாசல் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 40), ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இவரும், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும், சுஜித் என்பவரும் கடந்த 8ந்தேதி இரவு பெரம்பலூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதியில் 14 வயது சிறுமியும் 25 வயது மதிக்கதக்க வாலிபரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

Advertisement

அப்போது அங்கு ரோந்து சென்ற ஏட்டு முத்துக்குமரன் தனிமையில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரிடம் விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசாரிடம் தகராறு செய்ததோடு, செல்போன் மூலம் மூன்று ரோடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேரை அங்கு அழைத்து வந்து தகராறு செய்துள்ளார்.

குடிபோதையில் இருந்த அந்த மூன்று பேரும் தலைமை காவலர் முத்துக்குமரன் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த சுஜித் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முற்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏட்டு முத்துக்குமரன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் தலைமை காவலர் முத்துக்குமரனை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றது, துறைமங்கலம் பகுதியை சேர்ந்த வக்கீல் தினேஷ்குமார் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் தினேஷ்குமாருக்கு ஆதரவாக பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்
வக்கீல் தினேஷ்குமார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்குமரன் நடந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி “வாட்ஸ்அப்” உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் டிஜிபி, ஐஜி, மற்றும் டிஐஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஏட்டுவை வக்கீல் தாக்க முயன்ற வீடியோ காட்சி பதிவும், முத்துக்குமரன் நடவடிக்கை எடுக்க கோரி வெளியிட்ட ஆடியோ பதிவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வழக்கறிஞர் தினேஷ்குமார் மீது 294B , 352, 353 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 04:34:31
Privacy-Data & cookie usage: