பெரம்பலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை: போலீசார் விசாரணை!

schedule
2022-03-08 | 11:42h
update
2022-03-08 | 11:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Village administration officer commits suicide near Perambalur: Police investigating!

பெரம்பலூர் அருகே உடல்நலம் பாதிக்கப்ட்ட விஏஓ , தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கண்ணப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சந்திரமோகன் (52), அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தில், வி.ஏ.ஓ வாக பணியாற்றி வந்தார். சந்திரமோகனுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அதோடு, ஒரு வாரத்திற்க்கு முன்பு கண்பார்வை கோளாரு தொடர்பாக கண் அறுவை சிகிச்சையும் செய்ததால், மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், சந்திரமோகனுக்கு ஏற்பட்ட உடல் வேதனை தாங்கமுடியாமல், இன்று காலை 11.00 மணி அளவில் தனது வீட்டு படுக்கை அறை மின்விசிறி கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:29:25
Privacy-Data & cookie usage: