கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் பரிந்துரை சரிபார்க்க அழைப்பு

schedule
2019-09-24 | 06:38h
update
2019-09-24 | 06:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Village Health Nurse is invited to check the recommendation for vacancies
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான பரிந்துரை விபரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1234 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்திற்கு அரசு அல்லது அரசல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 -ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் 18 மாத கால ஆக்ஸ்லெரி நர்ஸ் மிட்வெய்ப் மற்றும் பல் நோக்கு சுகாதார செவிலியர் படிப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதியுடன் 2 வருட ஆக்ஸ்லெரி நர்ஸ் மிட்வெய்ப் மற்றும் பல் நோக்கு சுகாதார செவிலியர் படிப்புயுடன் தமிழ்நாடு நர்ஸிங் மற்றும் மிட்வெய்ப் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பித்திட பெண்கள் மட்டும் தகுதியானவர்கள். மேலும் வயது வரம்பு 01.07.2019 அன்று பொதுப் பிரிவில் 18 வயது முதல் 40 வயதிற்குள்ளும், எஸ்சிஏ, எஸ்டி, எஸ்சி, பிசி, பிசிஎம், எம்பிசி உள்ளிட்ட இதர பிரிவினர்களில் 18 வயது முதல் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியுடைய பதிவுதாரர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று மற்றும் தமிழ்நாடு நர்ஸிங் மற்றும் மிட்வெய்ப் கவுன்சிலில் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றுடன் 26.09.2019 -க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான பரிந்துரை விபரங்களை தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 08:13:33
Privacy-Data & cookie usage: