எஸ். எஃப். சி., நிதி வழங்க கோரி வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள், பெரம்பலூர் கலெக்டரிடம் மனு!

schedule
2020-12-10 | 06:24h
update
2020-12-10 | 06:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Village Panchayat Leaders of Veppur Union, petition to Perambalur Collector to provide S. F. C. funds

கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேப்பூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இது குறித்து வேப்பூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று, தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் மாநில அரசின் நிதி ஊராட்சிகளுக்கு வருவதில்லை, ஆகையால் மாநில அரசின் நிதி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 மாதங்களாக ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும மாதம் தவறாமல் வழங்கவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் பிரித்து வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 18:02:18
Privacy-Data & cookie usage: