பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை புதிய இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

schedule
2017-03-27 | 09:37h
update
2026-06-27 | 00:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

villagers opposition near in Perambalur, tasmac shop will change at the new location

பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை புதிய இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு இருகிராம மக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர் அருகே எசனை மற்றும் கீழக்கரை இரு கிராமங்கள் உள்ளது. இக்கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆத்தூர் பெரம்பலூர் முக்கிய சாலையில் தற்போது இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் மதுபானக்கூடம் இரண்டும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான இடமாக இருக்கும் வடுவத்தாய் கோயில் அருகே உள்ள குடி தண்ணீர் ஆழ்குழாய் மாற்றப்பட உள்ளது.

Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். பள்ளி அருகிலும், குடிநீர் குழாய் அருகிலும், விவசாயிகள் அறுவடைக்கு பயன்படுத்தக்கூடிய உலர்த்தும் ஆகியவற்றின் அருகில் மது பானக்கடை வந்தால் குடிகாரர்களின் தொல்லை அதிகரிக்கும், பெண்களின் சுகந்திரத்திற்கு அச்சுறுத்தல் உண்டாகும், என்பதால் அப்பகுதியில் மதுபானக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்தி வேறு பகுதிக்கு மாற்றி எங்கள் இரு கிராம மக்கள் நிம்மதியாய் வாழ வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு கொடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:53:29
Privacy-Data & cookie usage: