ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2020-05-04 | 15:02h
update
2020-05-04 | 15:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Violence against women can be reported during curfew – Perambalur Collector Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

தற்போது இருக்கும் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் தடுப்பதற்கு தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணியற்றும் அங்கன்வாடி பணியாளர்களை தற்காலிக ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தற்காலிக ஒருங்கிணைப்பாளராக நியமித்து சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை செயலர் தெரிவித்துள்ளர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து அங்கன்வாடி பணியாளர்களால் பெறப்படும் விண்ணப்பங்கள், பிரச்சனைகள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மூலமாக மாவட்ட சமூக நல அலுவலர், பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்கபடும். புகார் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அங்கன்வாடி பணியாளர்களின் தொலைபேசி எண்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 05:21:31
Privacy-Data & cookie usage: