Vocational training centers admissions deadline extension

ITI அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் மஞ்சுளா தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2016ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்ககான கலந்தாய்வு பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஒருசில பயிற்சி பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு, விண்ணப்பிப்பதர்கான கால அவகாசம் 23.09.2016 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை , www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 14.09.2016 முதல் 23.09.2016 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயதுவரையும், பெண்களுக்கு வயதுவரம்பு ஏதும் இல்லை.

இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடைசலர், இயந்திரவேலையாள், பொருத்துநர், கம்மியர், மோட்டார் வண்டி, மின்சார பணியாளர், மெயின்டனன்ஸ் ஆஃப் சோலார், எக்யூப்மென்ட ஃபுட் புரொடக்ஷன், ஆகிய தொழிற்பிரிவுகளிலும் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு 24.09.2016 அன்று பெரம்பலூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!