Vocational training with grants; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாது:

தேசிய தொழில் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-10-2021 செவ்வாய் கிழமை அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை, மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி சர்க்கரை மற்றும் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சிஅடைந்தவர்கள், 8ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் அடையவும், பயிற்சி காலத்தில், மாதந்தோறும் ரூ.6,500 முதல் ரூ.8,000 வரை உதவித் தொகை தொழில் நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, பயிற்சியை முடித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பின் போது முன்னுரிமை தகுதியினை பெற்றுக் கொள்ள வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!