அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்று விட்டு திரும்பிய தொண்டர்கள் கார்

லாரி மோதல்: டிரைவர் பலி! 6 பேர் காயம்!!

schedule
2022-07-12 | 18:01h
update
2022-07-12 | 18:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Volunteers returning from AIADMK general committee meeting Car-Lorry collision: Driver killed! 6 people injured near in Perambalur !!

சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்ற தொண்டர்கள் கார், லாரியுடன் மோதி பெரம்பலூர் அருகே விபத்திற்குள்ளானது. இதில், கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6 அதிமுக தொண்டர்கள் காயமமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் அஇஅதிமுக கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள் கார் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். கார் தங்க நகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரம்பலூர் நோக்கி வந்த பல்கர் லாரியின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. தஞ்சாவூர் ஒரத்தநாடு பாலாமுத்தூர் குடிக்காட்டை சேர்ந்த யாகப்பா மகன் புகழ் (22), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரத்தநாடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த தியாகராஜன் மகன் பாண்டியராஜன் (41), நெடுவாய்க்கோட்டையை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அறிவழகன் (42), அதே கிராமத்தை சேர்ந்த செல்வராசு (60), பின்னையூரை சேர்ந்த ராமையன் மகன் ஜெயபால் (50), தமையன்குடிக்காட்டை சேர்ந்த வேலாயுதம் மகன் அன்பரசு (43), ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்டு, அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சன்னம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் சேட்டு (40), காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:01:53
Privacy-Data & cookie usage: