Walkie Talkie to Ramanathapuram District Officials to protect people in storm and floods

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் சுழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு அனைவரும் விழிப்புடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என கலெக்டர் நடராஜன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்த இயற்கை பேரிடர் தொடர்பான ஆலோசனை குக்ஷட்டத்தில் கலெக்டர் நடராஜன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர், ஆர்.டி.ஓ.,க்கள், 8 தாசில்தார்களுக்கு வாக்கி டாக்கி கருவிகளை வழங்கி பேசியதாவது:

வடகிழக்கு பருவமைழ காலத்தினைெயாட்டி மாவட்ட நிர்வாகத்தின் முலம் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ராமநாதபுரம்மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிரடர் சுழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு அனவவரும் விழிப்புடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொறுத்தவரையில், மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடரினால் பாதிக்கப்படக்குடிய சாத்தியக்கக்ஷறுகள் உள்ள பகுதிகளாக 38 இடங்கள் கண்டறியப்பட்டு அந்தந்த இடங்களில் உள்ள பொது மககளை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கு ஏதுவாக அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய 38 புயல் காப்பக மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 23 பல்நோக்கு புயல் காப்பக மையங்கள், 91 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் 37 பள்ளி கட்டடிடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொது மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் மண்டல அளவில் சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமயிலும் வருவாய் வட்டங்களில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமயிலும் பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேரிடரினால் பாதிக்கப்படக்கக்ஷடிய சாத்தியக்கக்ஷறுகள் உள்ளதாக கண்டறியப்பட்ட 38 இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு அந்த பகுதிகளில் மொத்தம் 15 சிறப்பு மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் ஏற்பட்டுப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் முலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2017 முதல் இதுவரை மொத்தம் 388 பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் ஒத்திகைகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக 62 இயந்திர படகுகள், 48 ஜெனரேட்டர்கள், 52 வெள்ள மீட்பு ஒளிர் விளக்குகள் உட்பட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1ௗ6 மைழயளவு கணக்கீட்டு நிலையங்களின் முலம் தினந்தோறும் மைழயளவு கணக்கீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேவளை மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரளவு கண்காணிக்கப்பட்டு வருவதோடு அந்தந்த பகுதிகளில் கரை, உடைப்பு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரிசெய்திட ஏதுவாக போதிய அளவு மணல் முட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுளளது.

எனவே வடகிழக்கு பருவமழை முன்னெனச்சரிக்கை நடவடிக்கைள பொறுத்த வரையில் மாவட்ட நிர்வாகத்தின் முலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மைழ காலங்களின் போது எதிர்கொள்ள நேரிடும் மைழ வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களின் போது பொது மக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேமம்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களின் முக்கிய அலுவலர்களக்கு வாக்கி டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று, மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குர், ேகாட்டாட்சகயர்கள், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) மற்றும் மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர்கள் ஆகியோர்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் வழங்கப்படுகின்றன. இத்தகவல் தொடர்பு சாதனத்தினை திறம்பட பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொது மக்களை காத்திட பேரிடர் கண்காணிப்பு குழுவினர் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தொடர்பு கொண்டு போர்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு கலெக்டர் நடராஜன் பேசினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பரமக்கு சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் ஆர்டிஓ பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!