பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் வாட்டர் சர்வீஸ் கம்பனி உரிமையாளர் பரிதாப பலி

schedule
2018-04-03 | 08:48h
update
2018-04-03 | 11:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Water Service Company owner killed in an accident near in perambalur

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் – நான்கு ரோடு செல்லும் வழிச் சாலையில் வசித்து வருபவர் அரிச்சந்திரன் (வயது 53). இவர் சொந்தமாக, செங்குணம் கைகாட்டி பிரிவு அருகே, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழ்புறத்தில் வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்திற்கு சென்று விட்டு, தனது மோட்டர் சைக்கிளில் எதிர் திசையில் செங்குணம் கை காட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வேன் படு பயங்கரமாக அரிச்சந்திரன் மீது மோதியது. இதில் அரிச்சந்திரன் தலை மற்றும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டர் சைக்கிள் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்து சென்று போட்டு விட்டு வேனை ஓட்டிய டிரைவர் வேனுடன் தப்பி சென்றார். அப்போது அங்கு அரிச்சந்திரன் வாட்டர் சர்வீஸில் பணிபுரிந்தவர்கள் வந்து வேனை மடக்குவதற்குள் தப்பித்து சென்றது.

Advertisement

இது குறித்து அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரம்பலூர் நெடுஞ்சாலை சுற்றுக் காவல் போலீசார், பெரம்பலூர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேனை தீவிர தேடி வருகின்றனர்.


இளகிய மனம் படைத்தவர்கள் கீழே உள்ள விபத்து படத்தை பார்க்க வேண்டாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 00:22:33
Privacy-Data & cookie usage: