குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு!

schedule
2026-04-15 | 05:01h
update
2026-04-15 | 05:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

“We must ensure that Saranya, the IJK candidate for the Kunnam constituency, wins by a margin of 50,000 votes,” stated PMK President Anbumani Ramadoss during an election campaign speech.

தேசிய ஜனநாயக கூட்டணியில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகின்றது. இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சரண்யா அன்பழகனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர்ரவி பச்சமுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

ஐஜேகே ரவி பச்சமுத்து பேசியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு சகோதரர் அண்ணன் அன்புமணி அவர்களே, பெரும் திரளாக கூடியிருக்கின்ற காடுவெட்டியார் ஆசி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்களே தேசிய ஜனநாயக கூட்டணியினரே தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடையாளமாய் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு அலை உறுதிப்படுத்துவதாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சரண்யா அன்பழகன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென தெரிவித்தார்

Advertisement

செந்துறையில் குன்னம் சட்டமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி சரண்யா அன்பழகனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: நடை பெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும், சரண்யா வெற்றி பெற்றால் எடப்பாடி யார் முதல்வராக வேண்டும், தமிழகத்திற்கு ஆட்சி மாற்றம் வேண்டும், உறுதியாக நாம் குன்னம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும், நாம் ஒன்று சேர்ந்துள்ளோம், தமிழ்நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல். மக்கள் விரோத திமுக அரசு விரட்டி அடிக்கப் பட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்,

பாரிவேந்தர் ஒரு பாட்டாளி, லட்சக்கணக்கான ரை படிக்க வைத்துள்ளார். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 50000 வாக்குகள் வித்தியாசத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரண்யா அன்பழகன் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் 10.5% விழுக்காடு இட ஒதுக்கீட்டில் திமுக துரோகம் செய்துவிட்டது, ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார்.

துரோகம் செய்த திமுகவை துரோகம் செய்த ஸ்டாலினை மறக்கவும் கூடாது மன்னிக்கவும் கூடாது என்றும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில்லாத இந்த திமுக அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும், ஆகையால் இன்னும் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா அன்பழகனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வைத்தி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 03:19:18
Privacy-Data & cookie usage: