மாஸ்க் அணிவது கட்டாயம்; மீறினால் ரூ. 100 அபராதம் ; வாகனம் பறிமுதல்: பயண அனுமதி ரத்து! பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா உத்தரவு!!

schedule
2020-07-08 | 17:07h
update
2020-07-08 | 17:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Wearing the mask is mandatory; If the violation is Rs. 100 fine; Vehicle confiscation: Travel permit canceled! Perambalur Collector v. Santha’s order!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடையே கைகழுவுதல், பொது இடங்களுக்கு வெளியே செல்லாமல் இருத்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் தேவையில்லாமல் நடமாடுவதை தடைசெய்யும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதன் காரணமாக, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்லலாம். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முககவசம் (மாஸ்க்) அணியவும், வெளியில் சென்று வந்த பிறகு சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் நிகழ்வுகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது, தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு அபராதம் ரூபாய் 100 வசூலிக்கப்படும். முகக்கவசம் அணியாமல் பயணம் மேற்கொள்பவர்களின் பயண அனுமதி ரத்து செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படும், என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 13:05:55
Privacy-Data & cookie usage: