அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் வரவேற்பு!

schedule
2022-06-25 | 01:57h
update
2022-06-25 | 07:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Welcome to AIADMK Deputy Coordinator Vaithilingam in Perambalur District!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சரும் அதிமுக முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு நேற்று சிறப்பான வரவேற்பளித்தனர்.

சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு வதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் சென்னையில் இருந்து இன்று தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்பிளாசாஅருகே மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு ஆளுயர மாலை மற்றும் சால்வை அணிவித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அரியலூர் புறவழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். வரவேற்பைப் பெற்றுக் கொண்டவர் அரியலூர் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார் (பெரம்பலூர்), ரவிச்சந்திரன் (வேப்பந்தட்டை), செல்வமணி ( வேப்பூர்), பெரம்பலூர் நகர செயலாளர் ஆர். ராஜபூபதி உள்ளிட்ட ஏராளமான உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள், திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வானவெடிகள், அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு அளித்தனர். சுமார் 100 மேற்பட்ட கார்கள், பைக்குகளில் தொண்டர்கள, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்று பிரமாண்டம் காட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 23:35:44
Privacy-Data & cookie usage: