பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு வந்த திமுகவின் இரு சக்கரபிரச்சார விழிப்புணர்வு பேரணிக்கு, வரவேற்பு!

schedule
2023-11-25 | 14:57h
update
2023-11-25 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Welcome to DMK’s two-wheeler campaign awareness rally that reached Perambalur district border!


டிசம்பர் -17 அன்று சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்
இரு சக்கர விழிப்புணர்வு வாகன பிரச்சார பேரணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

Advertisement

கலைஞர் மண்டலத்திற்கு வருகை தந்த பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட எல்லையான மருதையான் கோவில் எனுமிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேரணியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு அரியலூர் மாவட்டத்தில் இருந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தார்.

இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பேரணியை மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன்,

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி, துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:45:16
Privacy-Data & cookie usage: