விஷம் அருந்திய வாலிபர் சிசிச்சையின் போது சாவு

schedule
2017-06-10 | 16:21h
update
2026-04-30 | 01:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

When the death of the young man treatment with Poisoned drunk
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள புதுவேட்டகுடி புதூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் மணிகண்டன் (26) இவர் திருமணம் ஆகாதவர். வெளிநாட்டில் வேலை செய்த அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு மணிகண்டனுக்கும் அவரது அப்பாவிற்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளார்.

Advertisement

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விரைவாக அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்திலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 01:29:38
Privacy-Data & cookie usage: