பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதல்: தாய் மகள் பலி

schedule
2017-08-07 | 16:56h
update
2026-09-21 | 09:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

who tried to cross the road near the mother and daughter in the bus collision killed on the spot near perambalur

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அப்பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தாய் மகள் இருவர் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது சுமார் 65), மேலராயம்புரம் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மையின் மகள் கஸ்தூரி (வயது 38), ஆகியோர் இன்று பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வள்ளியம்மையின் சகோதரி பார்வதியை நலம் விசாரிக்க சென்றிருந்தனர். தேனீர் அருந்துவதற்காக அருகே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். மீண்டும் மருத்துவமனைக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்த வந்தனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற (அல்ட்ரா டீலக்ஸ்) அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மோதிய அரசு பேருந்து நிற்காமல் சென்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போக்குவரத்து ரோந்து போலீசார் அரசு பேருந்தை மடக்கிப் பிடித்தனர். பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் திருச்சி மாவட்டம் சிறுகனூரை சேர்ந்த சேகர் கைது செய்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் நசுங்கி உயிரிழந்த தாய் வள்ளியம்மை, அவரது மகள் கஸ்தூரி ஆகியோரின் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கான அனுப்பி வைக்கப்ட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் கடுமையாக சுமார் அரை மணிநேரம் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட போலீசார் போக்குவரத்தை சீர் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 09:46:33
Privacy-Data & cookie usage: