Why did Ramanathapuram railway projects not happen before 2016? Minister questioned

ராமநாதபுரம் பகுதியில் ரயில்வே தொடர்பான திட்டங்கள் 2016 ஜூன் மாதத்திற்கு பிறகே நடந்துள்ளது. அதற்கு முன் ஏன் நடக்கவில்லை? நான் அமைச்சரான பிறகு ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு நேரடியாக கடிதம் எழுதி தீர்வு கண்டுள்ளேன். ஆனால் சிலர் எனக்கு பக்குவமில்லை என பேசி வருகின்றனர். அவர்கள் என்னிடம் நேரடியாக விவாதிக்க தயாரா? என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார்.

ராமநாதபுரத்தில் அதிமுகவில் 46வது ஆண்டு துவக்கநாள் விழா பொது ககக்ஷட்டம் நகர் செயலாளர் அங்குச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயாலாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பங்கேற்று பேசியதாவது:

அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அம்மாவால் இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக மாறிய பெருமை பெற்றுள்ளது. அம்மாவின் ஆட்சியை காப்பாற்ற ஜெயலலிதா படத்திற்கு முன்பாக சத்யம் செய்தோம். அப்போது நான் ஆட்சியை காப்பாற்ற எனது கடைசி ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என உறுதியளித்து சத்யம் செய்தேன். அந்த சத்யத்தின் அடிப்படையில்தான் இன்று வரை ஆட்சியை காப்பாற்ற போராடி வருகிறோம்.

எதிர்கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதையாவது கக்ஷறுகின்றனர். ஆனால் அம்மா இருக்கும் போதும், அவர்கள் மறைவுக்கு பின்பும் எங்கள் ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்சியில் விசுவாசம் உள்ளவர்கள் யார் என்று இங்கு பலருக்கு தெரியும். எனது ரத்தம் அதிமுக ரத்தம். எனது தாயார், தந்தை ஆகியோர் கட்சிக்காக உழைத்துள்ளனர். நாங்கள் தேர்தலின்போது பாடுபட்டதால் எங்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டு அதை நாங்கள் சந்தித்தோம். திமுக சாதாரண தொண்டன் கூட போலீஸ் ஸ்டேஷன் சென்று போலீசாரை மிரட்டுவார்கள். ஆனால் அதிமுக ராணுவம் போன்று கட்டுகோப்பாக இருப்பதால் காவல்துறை நிர்வாகத்தில் நாங்கள் என்றும் தலையிட்டது கிடையாது.

தற்போது திமுகவில் மீண்டும் ஏதோ எழுச்சி பயணம் என சொல்லுகின்றனர். மக்கள் என்ன செய்தீர்கள் அவர்கள் உங்களை ஆதரிக்க?

அதிமுக ஆட்சியில் 32 லட்சத்து 33 ஆயிரம் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 35 ஆயிரம் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு விடும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தில் மட்டும்தான் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு கேபிள் நிறுவனம் முலம் செட்டாப் பாக்ஸ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆக்டிவேசன் கட்டணமாக ரு.200 மட்டும் கொடுத்தால் போதும். அதற்கு மேல் கேபிள் ஆப்ரேட்டர்கள் பணம் வசுலித்தால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். தற்போது தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு சிறப்பாக ஆட்சி செய்கின்றனர்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி நகராட்சிகளில் 5 கோடி ருபாய் திட்ட மதிப்பில் பல இடங்களில் ரோடு அமைக்கும் பணி சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. டெங்கு தடுப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லுாரி, விவசாய கல்லுாரி, சட்டக்கல்லுாரி வேண்டும் என நான் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நிதிநிலமை கருதி முதலில் சட்டக்கல்லுாரி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவகல்லுாரி, விவசாய கல்லுாரிகண்டிப்பாக கிடைக்கும்.

ரயில்வே நேரம், கோச் மாற்றம் போன்ற சில வசதிகள் குறித்து நான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இங்குள்ள மிகச்சிறந்த அறிவாளி ஒருவர் என்னை பக்குவமில்லாத நபர் என சொல்லி வருகிறார். நான் கேட்கிறேன், நான் அமைச்சரானவுடன் 2016 ஜூன் மாதத்திற்கு பிறகுதான் ரயில்வே தொடர்பான சில திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு முன்பு அந்த நபர் என்ன செய்து கொண்டு இருந்தார்.

நான் அமைச்சர் என்ற ரீதியில் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி கேட்க உரிமை உள்ளது. பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என்றால் முதல்வர் முலமாக கடிதம் எழுதுவோம். மத்திய அமைச்சருக்கு மாநில அமைச்சர்கள் நேரடியாக கடிதம் எழுதலாம் அந்த வகையில் நான் ஒவ்வொன்றிற்கும் கடிதம் எழுதி பெற்று தந்தைத பொறுக்க முடியாமல் என்னை பக்குவமில்லாதவர் என கக்ஷறுகிறார்.

ஒரு எம்பி கட்சி நடத்தும் குட்டத்திற்கு இரவு 9.30 மணிக்கு வந்து அதுவும் 144 தடை உத்தரவு உள்ளபோது நாம் 10.30 மணி வரை பேசலாம் என சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் என்னை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், தலைமை கழக பேச்சாளர் குமுதாபெருமாள், தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் ரத்தினம், மாவட்ட பொருளாளர் சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆரிப்ராஜா, வீரபாண்டியன், வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!